அரசியல்உள்நாடு

தவறுகளை திருத்த பஸ்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு கால அவகாசம்

பஸ் மற்றும் முச்சக்கரவண்டி உபகரணங்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு பொலிஸாருக்கு கால அவகாசம் வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட சபை உறுப்பினர் ரொஷான் அக்மீமன, பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) தெரிவித்தார்.

முச்சக்கர வண்டிகள் மற்றும் பஸ் பாகங்கள் தொடர்பான சட்டத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அவசரப்பட்டு கொண்டு வரவில்லை என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, புதிய அரசாங்கம் வந்ததும் பொலிஸாரும் நல்லெண்ணத்துடன் சட்டத்தை அமுல்படுத்த சென்றதுதான் இங்கு நடந்தது எனவும் தெரிவித்தார்.

பஸ்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளின் துணைக்கருவிகளுக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டாம் என்றும், பேருந்துகள் மற்றும் முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு சட்ட முறைமைகளுக்கு இணங்க கால அவகாசம் வழங்குமாறும் பொலிஸாருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

விவசாய அமைச்சின் செயலாளராக புஷ்பகுமார நியமனம்

விதுர – தொலவத்த குறித்து கட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்

சமூக இடைவௌியை பேணாதவர்களை கைது செய்ய நடவடிக்கை