உள்நாடுபிராந்தியம்

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இரத்ததான நிகழ்வு

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இரத்த வங்கியில் நிலவுகின்ற இரத்த தட்டுப்பாடு காரணமாக அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக “உதிரம் கொடுப்போம் – உயிர்களை காப்போம்” எனும் தொனிப் பொருளில் இரத்ததான நிகழ்வு அட்டாளைச்சேனை சேனையூர் இளைஞர்கள் அமைப்பின் மற்றும் பாலமுனை பிறைட் இளைஞர்கள் அமைப்பு ஏற்பாட்டில் இன்றைய தினம் (04) அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் நடைபெற்றது.

இதன் போது அதிகமான இளைஞர்கள் கலந்நு இரத்தானம் வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இரத்த வங்கிக்கு பொறுப்பான வைத்தியர் மருதராஜன் மற்றும் தாதி உத்தியோகத்தர்கள் இளைஞர் சேவை உத்தியோகித்தர் ஏ.எல். எம். இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

-எம்.ஜே.எம்.சஜீத்

Related posts

ஒரு தொகை போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது

பால்மா விலையில் மீண்டும் மாற்றம்?

6ஆம் திகதி விவாதம் – திகதியை ஏற்றுக்கொண்ட அனுர