அரசியல்உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர் வீட்டில் கைவரிசை காட்டிய திருடர்கள்

ஹொரணை பிரதேசத்தில் அமைந்துள்ள களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டில் திருடர்கள் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த திருட்டுச் சம்பவம் கடந்த 02ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது.

வீட்டு உரிமையாளர்கள் யாரும் இல்லாத வேளையில் திருடர்கள் வீட்டுக்குள் நுழைந்து 25,000 ரூபாவை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரணை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கட்டுநாயக்க சம்பவம் : கூச்சலிட்ட பயணிதை காணவில்லை

பாராளுமன்ற தேர்தலில் 113 இற்கும் அதிகமான ஆசனங்களை பெற்று வரலாற்று சாதனைப் படைப்போம் – பிரதமர் ஹரிணி

editor

‘ரேவதா’ மர்மமான முறையில் உயிரிழப்பு