அரசியல்உள்நாடு

இலங்கைக்கான சீனத் தூதுவர் – சபாநாயகரை சந்தித்தார்

இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங், கௌரவ சபாநாயகர் (வைத்தியகலாநிதி) ஜகத் விக்ரமரத்னவை அண்மையில் (01) பாராளுமன்றத்தில் சந்தித்தார்.

இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.

இதன்போது சீன தேசிய மக்கள் காங்கிரசின் நிலைக்குழுவின் தலைவர் (சீன பாராளுமன்ற சபாநாயகர்) ஸாவோ லெஜி (Zhao Leji) அவர்களின் வாழ்த்துக் கடிதத்தை சீனத் தூதுவர் புதிய சபாநாயகரிடம் கையளித்தார். சீனத் தூதுவர் புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால ஒத்துழைப்பை சுட்டிக்காட்டினார்.

எதிர்காலத்தில், குறிப்பாக பரிமாற்றத் நிகழ்ச்சித் திட்டங்கள் மூலம் இரண்டு சட்டவாக்க நிறுவனங்களுக்கும் இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

பொலன்னறுவையில் உள்ள சீன – இலங்கை நட்புறவு தேசிய சிறுநீரகவியல் சிறப்பு வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளராக தனது முன் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட கௌரவ சபாநாயகர் வைத்தியகலாநிதி ஜகத் விக்ரமரத்ன, இலங்கை மக்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் சீன அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் நன்றி தெரிவித்தார்.

இரு பாராளுமன்றங்களுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இலங்கை – சீன பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை மீள் புதுப்பிப்பதற்கான ஆர்வத்தையும் சபாநாயகர் வெளிப்படுத்தினார்.

அத்துடன், ஜனாதிபதி கௌரவ அநுர குமார திசாநாயக்க அவர்களின் சீனவுக்கான முதலாவது விஜயத்துக்கான தயார்படுத்தல் தொடர்பில் குறிப்பிட்ட சீனத் தூதுவர் கீ சென்ஹொங், இந்த வரலாற்று நிகழ்வு இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்தும் எனத் தெரிவித்தார்.

Related posts

மழை காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் கடும் வாகன நெரிசல்

கடந்த 72 மணி நேரத்தில் 40 பேர் பலி

பெரிய நீலாவணை கலாசார மண்டபத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்க ஏற்பாடு

editor