உள்நாடுபிராந்தியம்

பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் தீக்கிரை – மட்டக்களப்பு பெண்களுக்கு உடனே உதவி வழங்கிய அமைப்பு

மட்டக்களப்பு – கல்லடி பிரிஜ் மார்க்கெட்டில் சுயதொழில் முயற்சியில் ஈடுபடும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களைச் சேர்ந்த முயற்சியாளர்களது மேசைகள் மற்றும் வியாபாரத்திற்காக களஞ்சியப்படுத்தியிருந்த பல இலட்சம் பெறுமதியான விற்பனைப் பொருட்கள் என்பன இனங்காணப்படாத நாச கார கும்பலினால் தீக்கிரையாக்கப்பட்டிருந்தது.

நாளாந்தம் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் இவ்வாறான சுய தொழில் முயற்சியாளர்களுக்கு ஏற்ப ட்ட விபரீத நிலையினை கருத்திற் கொண்ட சமாரிற்றன் பேஸ் நிறுவனம் இவர்களுக்கு தேவைப்பாடாக இருந்த இரண்டு மேசையினையும், பாதிக்கப்பட்ட 13 வியாபாரிகளுக்கும் புதுவருட பிறப்பினை முன்னிட்டு தலா 6000/= வீதம் நிதி உதவியினையும் வழங்கி வைத்துள்ளனர்.

மட்டு சுய தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த சுய தொழில் முயற்சியாளர்களுக்கான உதவிகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் சமாரிற்றன் பேஸ் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி எஸ்.ரமணதாஸ் மற்றும் அவரது பாரியார் திருமதி.ரமணதாஸ்,
மட்டு சுய தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் உ.உதயகாந்த் (JP), மட்டு சுய தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் ஆலோசகர் ஞானப்பிரகாசம் பிரியவரதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உதவிகளை வழங்கி வைத்தனர்.

உதவிகளை பெற்றுக் கொண்ட குறித்த சுய தொழில் முயற்சியாளர்கள் தமக்கான உதவிகளை வழங்கிய சமாரிற்றன் பேஸ் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி எஸ்.ரமணதாஸ் மற்றும் அவரது பாரியாரிற்கும், மட்டு சுய தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் உள்ளிட்ட குழுவினரிற்கும், தமது சந்தைத் தொகுதி எரியூட்டப்பட்ட போது தமக்கு பல வழிகளிலும் உதவிய மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கும் தமது நன்றிகளை தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு விசேட வாக்களிப்பு ஏற்பாடு

மின்சார உற்பத்திக்கான எரிபொருள் தொடர்பான விசேட கலந்துரையாடல்

தனது அரசியல் ஓய்வு பற்றி மகிந்தவின் அறிவிப்பு!