(UDHAYAM, COLOMBO) – நோட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒஸ்போன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமுற்ற பொலிஸ் அதிகாரியொருவர் நாவலபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்
நோட்டன் ஹட்டன் பிரதான பாதையில் ஒஸ்போன் கிளவட்டன் பகுதியிலே 24.05.2017 மாலை 5.15 மணியளவில் விபத்து சம்பவித்துள்ளது
ஹட்டன் பகுதியிலிருந்து வந்த முச்சக்கரவண்டியும் நோட்டன் பகுதியிலிருந்து வந்த மோட்டார் சைக்கிலுமே மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது
மோட்டார் சைக்கிலில் வந்த வட்டவலை பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் அதிகாரி டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்
முச்சக்கரவண்டியின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணையை நோட்டன் பொலிஸார் மேற்கொள்கின்றனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்.