உள்நாடு

திடீரென தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்

காலி மாத்தறை பிரதான வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று காலி நகரில் இன்று (29) மாலை தீப்பிடித்து எரிந்துள்ளது.

இந்த மோட்டார் சைக்கிளில் இருவர் பயணித்துள்ளதுடன், சமிக்ஞை விளக்கிற்கு அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்திய போது மோட்டார் சைக்கிளில் திடீரென தீப்பற்றியுள்ளது.

இந்நிலையில், காலி மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர் சென்று தீயை அணைத்துள்ளனர்.

எனினும் மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து நாசமானது.

Related posts

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டிலிருந்து நிசங்க சேனாதிபதி உட்பட இருவர் விடுதலை

தனிமைப்படுத்தப்பட்ட விமானப் பயணிகளுக்கு விசேட சலுகை

கொவிட் தடுப்பூசி நாட்டினை வந்தடைந்தது