உள்நாடு

தீப்பிடித்த கெப் வண்டிக்குள் சடலம்

ஹபரணை பகுதியில் தீப்பிடித்த கெப் வண்டிக்குள் சடலமொன்று காணப்பட்டுள்ளது.

ஹபரணை, மின்னேரிய வீதி 39,வது மைல்கல் பகுதியில் நேற்று இரவு கெப் வண்டியொன்று தீப்பிடித்துள்ளதுடன், பொலன்னறுவை தீயணைப்பு பிரிவினர் தீயை அணைத்துள்ளனர்.

விசாரணையில் காருக்குள் சடலம் ஒன்று இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கெப் வண்டியின் உரிமையாளர் என சந்தேகிக்கப்படுவதுடன், வண்டியின் பின் இருக்கையில் சடலம் காணப்பட்டுள்ளது.

கெப் வண்டியின் உரிமையாளர் தெகட்டன பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் மின்னேரிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள நிவாரணங்கள்

வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் இருவருக்கும் பிணை!

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் மின்சாரத்துறையினர்