உள்நாடு

அவசர திருத்த வேலை – 18 மணித்தியாலங்கள் நீர் வெட்டு

களுத்துறை தெற்கு, களுத்துறை வடக்கு, வாத்துவ, வஸ்கடுவ, மொறொந்துடுவ மற்றும் போம்புவல ஆகிய பகுதிகளுக்கு 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதன்படி நாளை (26) காலை 09.00 மணி முதல் நாளை மறுதினம் (27) அதிகாலை 03 மணி வரை குறித்த பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும்.

பிரதான குழாயில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவசர திருத்த வேலைகளுக்காக இந்த நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க இராஜினாமா

அபிவிருத்தித் திட்ட அரச வர்த்தமானியை இடைநிறுத்தியது உயர்நீதிமன்றம்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம்