புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வாகவத்தை கிரீட் உப மின்நிலையம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
கடந்த 19ஆம் திகதி இது மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை முதலீட்டுச் சபையின் வாகவத்தை மற்றும் மில்லனிய கைத்தொழில் வலயங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்காக இந்த மின் உப நிலையம் பிரதானமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
அதற்காக இலங்கை முதலீட்டுச் சபை 2,300 மில்லியன் ரூபாவை முதலீடு செய்துள்ளது.
இலங்கை முதலீட்டுச் சபையினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 05 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த புதிய கிரிட் உப மின் நிலையம், தற்போதுள்ள கைத்தொழில்களுக்கு மின்சார விநியோகத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் தரத்தை மேம்படுத்தல், எதிர்கால தொழில்களுக்கு நிலையான மற்றும் தரமான மின்சாரத்தை வழங்குவதற்காக 90 எம்.வி.ஏ திறன் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் பரிமாற்ற கட்டுமானத் திட்டத்தின் (TCP) கிளை இந்த புதிய கிரிட் உப மின் நிலையத்தை வடிவமைத்து, நிர்மாணித்து மற்றும் ஒருங்கிணைத்து வருகிறது.
வாகவத்தை கிரிட் உப மின்நிலையத்தை முழுமையாக இலங்கை மின்சார சபை ஊழியர்களின் உழைப்பு பங்களிப்பில் நிர்மாணிக்கப்பட்ட முதல் கட்ட உப மின்நிலையம் ஆகும்.