உலகம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குவைத் நாட்டுக்கு விஜயம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று 21 ஆம் திகதி குவைத் நாட்டுக்கு விஜயம் செய்கிறார்.

குவைத் அமிர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் அழைப்பின் பேரில் விஜயம் செய்யும் பிரதமர் மோடி இன்றும் நாளை 22 ஆம் திகதியும் குவைத்தின் மன்னர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட உள்ளார்.

கடந்த 43 வருட காலப்பகுதியில் இந்தியத் தலைவர் ஒருவர் குவைத் நாட்டுக்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், இவ்விஜயத்தின் போது பிரதமர் மோடி குவைத் அமீர் உட்பட அந்நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்த உள்ளார். அத்தோடு அங்குள்ள இந்திய சமூகத்தினரையும் அவர் சந்திக்கவிருக்கிறார்.

இந்தியாவும் குவைத்டும் பாரம்பரிய நட்பு நாடுகளாகும். இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. அந்த வகையில் குவைத்டின் சிறந்த வர்த்தக பங்காளர்களில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.

அதனால் பிரதமர் மோடியின் குவைத்டுக்கான விஜயம் இருதரப்பு நட்புறவை மேலும் வலுப்படுத்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.

Related posts

பணக்கார நாடுகள் மீது உலக சுகாதார அமைப்பு குற்றச்சாட்டு

ஈக்வடோர் ஜனாதிபதி வேட்பாளர் சுட்டுக் கொலை!

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை