அரசியல்உள்நாடு

மியன்மார் அகதிகளை நேரில் சென்று பார்வையிட்ட ரிஷாட் எம்.பி அத்தியாவசிய உதவிகளை செய்து கொடுத்தார் – வீடியோ

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் மீட்கப்பட்ட மியன்மார் அகதிகள் அனைவரும் தற்போது திருகோணமலை தி/ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் திருகோணமலை மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர் டாக்டர் ஹில்மி மொஹிதீன், ஹில்மி மஹ்ரூப் ஆகியோர் சென்று பார்வையிட்டுள்ளனர்.

அவசரமாக தேவையாக இருந்து அத்தியாவசிய பொருட்களும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனால் வழங்கி வைக்கப்பட்டது.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கருத்து தெரிவிக்கையில்……

குறித்த மியன்மார் அகதிகளுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களால் முடிந்தளவு தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் குறித்த அகதிகளின் நிலைமை தொடர்பில் அரசாங்கத்துடனும் சம்மந்தப்பட்ட அமைச்சருடனும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

Related posts

கடந்த 4 நாட்களில் 140 மில்லியன் வருமானம்

ஐக்கிய தேசியக் கட்சி சத்தியாக்கிரகத்திற்கு தயார்

வீதி சமிஞ்சைகளை மீறும் செயற்பாடுகள் அதிகரிப்பு!