ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதிஉயர்பீடக் கூட்டம் நேற்று(20) நடைபெறுவதாக ஏலவே அறிவித்திருந்த போதிலும் அக்கூட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
விசேடமாக இக்கூட்டத்தில், கட்சிக்கு எதிராகச் செயற்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தல், உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தயார்ப்படுத்தல்களை மேற்கொள்ளுதல், அரசின் செயற்பாடுகள் மற்றும் அவை தொடர்பான கட்சியின் நிலைப்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக ஆராயப்படவிருந்ததாக தெரியவருகிறது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் முழக்கம் மஜீத் அவர்களின் மரணம் காரணமாக இக்கூட்டம் பிரிதொரு நாளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக UTV செய்தி பிரிவுக்கு முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.