அரசியல்உள்நாடு

பெண்கள் வலுவூட்டல் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

அனைத்து சீன பெண்கள் சம்மேளனத்தின் (ACWF) துணைத் தலைவியான சாங் டோங்மேய், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்து, பெண்கள் வலுவூட்டல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான பரஸ்பர முயற்சிகள் குறித்து கலந்துரையாடினார்.

திருமதி சாங் டோங்மேய் மற்றும் அவரது தூதுக்குழுவினரை வரவேற்ற பிரதமர், இலங்கைக்கும் – சீனாவுக்கும் இடையிலான நீடித்த நட்புறவைப் பாராட்டினர்.

இந்த கலந்துரையாடல் பெண்களின் சுகாதாரம், கல்வி மற்றும் பொருளாதாரப் பங்கேற்பு ஆகியவற்றில் பகிரப்பட்ட சவால்கள் மற்றும் வாய்ப்புகளை மையமாகக் கொண்டிருந்தது.

பெண்களின் தொழிற்படை ஈடுபாடு மற்றும் கீழ்மட்ட பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது உட்பட சீனாவின் முன்னேற்றங்கள் குறித்து சாங் டோங்மேய் விளக்கினார்.

இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong உட்பட இலங்கை சீனத் தூதரகத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் இலங்கைக் குழுவில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, வெளியுறவு அமைச்சின் கிழக்கு ஆசியாவிற்கான பணிப்பாளர் நாயகம் திருமதி ருவந்தி தெல்பிட்டிய மற்றும் கிழக்கு ஆசியப் பிரிவின் பணிப்பாளர் திருமதி உதானி குணவர்தன ஆகியோர் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

Related posts

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல், மோசடி – விசாரணைகள் ஆரம்பம் – வசந்த சமரசிங்க

editor

அரசியலமைப்பு பேரவை இன்று கூடுகின்றது

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 87 ஆக உயர்வு