அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

10 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக ஜகத் விக்கிரமரத்ன

இன்று (17) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் 10வது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விக்ரமரத்ன தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புதிய சபாநாயகர் பதவிக்கான முன்மொழிவு பிரதமர் ஹரிணி அமரசூரியவினால் கொண்டுவரப்பட்டதுடன், சபைத்தலைவர் பிமல் ரத்நாயக்க அதனை உறுதிப்படுத்தினார்.

10வது பாராளுமன்றத்தின் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட அசோக ரங்வல ராஜினாமா செய்ததையடுத்து, சபாநாயகர் பதவி வெற்றிடமாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ?

editor

மழையுடனான காலநிலை

மாதம்பை பொலிஸ் நிலையத்திற்குள் கான்ஸ்டபள் ஒருவர் தற்கொலை