இந்தியாவிற்கு உத்தியோகபூர் விஜயம் செய்துள்ள இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான இருதரப்பு கலந்துரையாடல் புதுடில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இடம்பெற்றது.
இதன்போது இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களான விஜித ஹேரத் மற்றும் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டனர்.