அரசியல்உள்நாடு

சிலிண்டரின் தேசியப் பட்டியல் எம்.பியானார் பைசர் முஸ்தபா – வெளியானது வர்த்தமானி

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக பைசர் முஸ்தபாவின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்களை கைப்பற்றியது.

அதில் ஒரு ஆசனத்திற்கு ரவி கருணாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சுனில் ஜயவர்தன கொலை – மீண்டும் விளக்கமறியலில்

இந்தியாவில் இருந்து மற்றுமொரு மாணவக் குழு இலங்கைக்கு

போராட்டம் நடைபெறும் பகுதிகளில் தனியார் பேருந்துகள் இயங்காது