அரசியல்உள்நாடு

பாராளுமன்ற இணையத்தளத்தில் சபாநாயகரின் கலாநிதி பட்டம் நீக்கப்பட்டது – கல்வி தகமை என்ன ?

இலங்கை பாராளுமன்றத்தின் இணையத்தளத்தில் சபாநாயகர் அசோக சப்புமல் ரன்வல கலாநிதி பட்டம் பெற்றவர் என்ற குறிப்பு அகற்றப்பட்டுள்ளதை தொடர்ந்து சபாநாயகரின் கல்வித்தகமை குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்துள்ளன.

முன்னர் கலாநிதி அசோக சப்புமல் ரன்வல என குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் தற்போது கலாநிதி என்பது அகற்றப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அவர் தான் கலாநிதி பட்டம் பெற்றவர் என குறிப்பிட்டது எவ்வளவு தூரம் உண்மையானது என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்திலேயே இணையத்தளத்தில் இந்த மாற்றங்களை செய்துள்ளனர் கூகுள் தேடு பொறி கலாநிதி என்ற காண்பிக்கின்றது என தவறான தகவல்கள் குறித்த ஆய்வாளர் சஞ்சனா ஹட்டொட்டுவ தெரிவித்துள்ளார்.

Related posts

அஜித் பிரசன்ன மீண்டும் விளக்கமறியலில்

மஹிந்த, பசில் இருவருக்கும் உயர் நீதிமன்றத்தின் அனுமதியின்றி வௌிநாடு செல்ல தடை

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கின்றனர்