உள்நாடு

5 மாணவர்கள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து – ஒருவர் பலி

செல்லக்கதிர்காமம் பகுதியில் அக்கரவிஸ்ஸ வாவியில் 5 மாணவர்கள் பயணித்த கட்டுமர படகொன்று கவிழ்ந்துள்ளது.

விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், உயிரிழந்தவர் செல்லக் கதிர்காமம் பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய பிரமோத் என்ற மாணவராவார்.

இந்த விபத்து இன்று (07) மாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இம்முறை உயர்தரத்தில் கல்வி பயிலும் 5 மாணவர்கள் இந்த படகில் பயணித்த நிலையில், படகு கவிழ்ந்ததை தொடர்ந்து கிராம மக்கள் உடனடியாக விரைந்து அவர்களை காப்பாற்றியுள்ளனர்.

உயிரிழந்த மாணவனின் சடலம் கதிர்காமம் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்று மழையுடன் கூடிய காலநிலை

கல்வியாண்டு 2022 இற்கான பரீட்சை தினங்கள்

இன்றைய வானிலை