அரசியல்உள்நாடு

செவிப்புலனற்ற முதலாவது பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வாவின் கன்னி உரை

இலங்கையின் செவிப்புலன் அற்ற முதலாவது பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா இன்று (6) பாராளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார்.

அவர் தனது முதலாவது பாராளுமன்ற உரையில், 76 வருடங்களின் பின்னர் மாற்றுத்திறனாளியொருவர் இலங்கை பாராளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளியான பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் அரச தரப்புடன் இணைந்து மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை தன்னால் நிரூபிக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சுகத் வசந்த டி சில்வா தேசிய மக்கள் சக்தியினால் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

Related posts

A/L பரீட்சை இன்று மீண்டும் ஆரம்பம்

editor

இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு பெரும் வர்த்தக நிவாரணம்

தொடர்ந்தும் வலுக்கும் கொரோனா