முஸ்லிம் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய பட்டியலில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட எஸ். எம். நளீம் இன்று (03) சபாநாயகர் அசோக ரன்வல முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 87,038 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை வென்றது.
இதன்படி, கட்சிக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்று கிடைத்துள்ளதுடன், அந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு இவரை நியமிக்க கட்சி தீர்மானித்திருந்தது.
இவர் இதற்கு முன்பு ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளராகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.