உள்நாடு

சீரற்ற வானிலை – டெங்கு, எலிக்காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம்

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக எதிர்வரும் காலங்களில் டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம் அதிகரிக்கலாம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளனர்.

வெள்ள நீர் தணிந்ததன் பின்னர் டெங்கு பரவுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக ஆரோக்கியம் தொடரை்பான விசேட வைத்தியர் அனோஜா தீரசிங்க தெரிவித்துள்ளார்.

வயல்வெளிகளில் பணிபுரிபவர்கள் மற்றும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வாழும் மக்கள் எலிக் காய்ச்சலில் இருந்து தற்காத்துக் கொள்ள தேவையான சிகிச்சைகளை பெற்றுக் கொள்வது அவசியம் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கையில் ஒமிக்ரோன் தொற்று அடையாளம்

மேலும் பலருக்கு கொரோனா உறுதி

இரத்மலானை மாணவனைத் தேட 4 பொலிஸ் குழுக்கள் நியமனம்