உள்நாடு

வௌ்ளத்தில் சிக்கிய நபரின் சடலம் 4 நாட்களின் பின் மீட்பு

ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நபர் ஒருவரின் சடலம் 4 நாட்களின் பின்னர் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 26.11.2024 அன்று கிட்டங்கி ஆற்றுக்கு குறுக்காக பயணம் செய்த 48 வயது மதிக்கத்தக்க கூலி தொழிலாளியான குறித்த நபர் வெள்ள நீரினால் அடித்து செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயிருந்தார்.

இந்நிலையில் 4 நாட்களாக தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த இலங்கை கடற்படையினர் இன்று (29) திரவந்திய மேடு பகுதியில் கரையொதுங்கிய நிலையில் குறித்த நபரின் சடலத்தை மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் ஆரம்பத்தில் யார் என்று அடையாளம் காணப்படவில்லை. பின்னர் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு சடலம் எடுத்து செல்லப்பட்டிருந்தது.

அங்கு சடலத்தை அவரின் உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் கல்முனை பாண்டிருப்பு பகுதியை சேர்ந்த நாகலிங்கம் சுரேஸ் (வயது-48) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த சடலம் மீதான மேலதிக நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

-பாரூக் ஷிஹான்

Related posts

பொதுத்தேர்தல் தொடர்பில் பிரதமர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றுடன் கூடிய மழை

வாகன இறக்குமதிக்கு தற்காலிகத் தடை