அரசியல்உள்நாடு

வெள்ள நீரை வடிந்தோட செய்வது தொடர்பாக இம்ரான் எம். பி மற்றும் பிரதேச சபை செயலாளர்களுக்கு இடையில் அவசர சந்திப்பு

திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியா பெய்து வரும் அடை மழையால் தாழ்நில பகுதிகளில் பல வெள்ளத்தில் மூழ்கி உள்ளதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

மக்களின் வீடுகளிலும் பாதைகளிலும் தேங்கி உள்ள நீரை விரைவாக வடிந்தோட செய்வதற்காக எடுக்க பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் தொடர்பாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபுக்கும் கிண்ணியா நகர சபை, கிண்ணியா பிரதேச சபை, மூதூர் பிரதேச சபை, திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை செயலாளர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நேற்று (26) இடம்பெற்றது.

வெள்ள நீரை விரைவாக வடிந்தோட செய்ய தேவைப்படும் கனரக இயந்திரங்களை தனியாரிடம் இருந்து பெறுதல், பிரதேச சபை ஊழியர்களுக்கு மேலதிகமாக பொதுமக்களின் பங்களிப்பை பெறுவது மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.

Related posts

புத்தளத்தில் ஒரு தொகை மஞ்சள் மீட்பு.

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் குறைப்பு!

சீன பாதுகாப்பு அமைச்சர் – ஜனாதிபதி கோட்டாபய சந்திப்பு