நாட்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் 2025 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றதை தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் கடந்த 14ஆம் திகதி நடத்தப்பட்டது.
இந்நிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது