அரசியல்உள்நாடு

தேசியப் பட்டியல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் இறுதி தீர்மானம் இன்று

ஐக்கிய மக்கள் சக்தியின் எஞ்சிய தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் இன்று (22) இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பான தீர்மானம் இன்று எடுக்கப்படும் என அக்கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி 5 தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை வென்றுள்ளதுடன், அதன் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார அவற்றில் ஒன்றில் ஏற்கனவே சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

இதன்படி, எஞ்சிய 4 தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கான பெயர்கள் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும் என பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஏறாவூர் நகரசபையின் முன்னாள் தலைவர் எம்.எஸ்.நளீம் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

இடமாற்ற பிரிவுக்கு ஆசிரியர்களை அழைக்காதிருக்க தீர்மானம்

சம்பந்தன் எப்போதும் இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாட்டிற்காக பங்காற்றி வந்தார் -ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரை

ஒக்டோபர் முதல் வாரத்தில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!