அரசியல்உள்நாடு

பலமான மாற்றுத்தெரிவு சங்குச் சின்னமே – சிவசக்தி ஆனந்தன்

தேர்தல் களத்தில் உள்ள கட்சிகளில் பலமான கூட்டணியாகவும் தமிழ் மக்களுக்கான மாற்றுத் தெரிவாகவும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியே இருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வன்னி மாவட்ட வேட்பாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று (11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

வன்னியில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியானது இங்கு போட்டியிடுகின்ற கட்சிகளை விட அதிகூடிய வாக்குகளை பெற்று 3 ஆசனங்களை பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக்கள் இருக்கிறது.

இன்று தேர்தல் களத்தில் உள்ள கட்சிகளில் பலமான கட்சியாகவும் கூட்டணியாகவும், ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியே உள்ளது. கடந்தகாலங்களில் அனைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக பயணித்த அந்தகட்சி இன்று நிலை குலைந்து சின்னா பின்னமாக்கப்பட்டுள்ளது.

அந்த நிலையில் தமிழ் மக்களுக்காக இன்று இருக்கக்கூடிய மாற்றுத் தெரிவு ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியே. மக்களின் பல பிரச்சனைகள் இங்கு தீர்க்கப்படவில்லை. தங்களின் பிரச்சனைகளை தீர்க்க எந்த ஒரு தரப்பும் முன்வரவில்லை என்று பொதுமக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

புதிய அரசாங்கம் சோசலிசம் சமத்துவம் என்ற கொள்கையை முன்னிறுத்தி ஆட்சியை முன்னெடுக்கிறது. இது சிங்கள மக்களுக்கு பொருத்தமாக இருக்கும் தமிழ் மக்களுக்கு பொருத்தமில்லாத ஒன்று.

எமக்கு நீண்டகால பிரச்சனை உள்ளது. சுயநிர்ணய உரிமைக்காக தொடர்ச்சியாக எமது மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். எனவே, இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு நடைமுறைக்கு சாத்தியமான ஒரு விடயத்தை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்றார்.

-தீபன்

Related posts

மெனிங் சந்தைக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு

லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்

editor

பேருந்து கட்டணம் குறித்து நாளை தீர்மானம்