புதிய வெளிவிவகார அமைச்சர் 46 நாட்களில் 50 இராஜதந்திரிகளை சந்தித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
திரு.விஜித ஹேரத் வெளிவிவகார அமைச்சராக செப்டெம்பர் 25ஆம் திகதி பதவியேற்றார்.
அதிலிருந்து 46 நாட்களில், 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டு அரச தலைவர்கள், அமைச்சர்கள், இராஜதந்திரிகள் மற்றும் சர்வதேச மற்றும் பிராந்திய அமைப்புகளின் அதிகாரிகள் சந்தித்துள்ளனர்.
அவர்களில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் ஒருவர்.
அமெரிக்கா , சீனா ,பிரிட்டன் , ரஷ்யா , ஜப்பான் ,சவுதி அரேபியா , ஜெர்மனி , பிரான்ஸ் , கனடா , தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தூதர்களும் இதில் அடங்குகின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபை , சர்வதேச நாணய நிதியம் , ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இந்த காலப்பகுதியில் வெளிவிவகார அமைச்சரை சந்தித்துள்ளதாக அமைச்சு கூறுகிறது.
புதிய அரசாங்கத்திற்கு வாழ்த்து தெரிவித்த இராஜதந்திரிகள் தொடர்ந்து ஒத்துழைக்க உடன்படுவதாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.