அரசியல்உள்நாடு

பொதுத் தேர்தல் விடுமுறை தொடர்பில் முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் 14 ஆம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள பல்கலைக்கழக மற்றும் க.பொ.த உயர் தர மாணவ, மாணவிகளின் தேர்தல் விடுமுறை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில் குறிப்பிடப்படுவதாவது,

பொதுத் தேர்தல் அன்று அரச பல்கலைக்கழகங்களில் பணிபுரிபவர்களுக்கும் அவற்றில் கல்வி கற்கும் மாணவ, மாணவிகளுக்கும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு இயலுமான விதத்தில் விடுமுறை வழங்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனியார் பல்கலைக்கழகங்களில் பணிபுரிபவர்களுக்கும் அவற்றில் கல்வி கற்கும் மாணவ, மாணவிகளுக்கும் தேர்தல் விடுமுறையை வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 2006 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் பிறந்த 18 வயதை பூர்த்தி செய்த அனைத்து க.பொ.த உயர் தர மாணவ, மாணவிகளுக்கும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு விடுமுறை வழங்குமாறு மேலதிக வகுப்புகளின் முகாமையாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

இரத்தினபுரியில் 67 பேர் தனிமைப்படுத்தல் முகாமிற்கு

எரிவாயு நிறுவனங்கள் சமையல் எரிவாயு குறித்து இன்று தீர்மானிக்கும்

அரசியல் பழிவாங்கலிற்குள்ளானவர்கள் தொடர்பில் ஆராய, மூவரடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழு