அரசியல்உள்நாடு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவின் மனைவியும் விளக்கமறியலில்

சட்டவிரோதமான முறையில் பொருத்தப்பட்ட சொகுசு காரை பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவின் மனைவி ரஷி பிரபா ரத்வத்தேவும் எதிர்வரும் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய இன்று (04) கங்கொடவில நீதிமன்றில் ஆஜராகியிருந்ததை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பல தடவைகள் மிரிஹான பொலிஸில் வாக்குமூலத்தை வழங்குமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அதன்படி, இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிய அவர், கைது செய்யப்பட்டார்.

Related posts

$35.3 மில்லியன் செலுத்தி டீசல் டேங்கர் ஒன்று விடுவிப்பு

நாட்டில் 2054 பேருக்கு கொரோனா

கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு