உலகம்

அமெரிக்காவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

அமெரிக்காவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

இன்று அதிகாலை 01.45 மணியளவில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓரிகானின் பகுதியில் இருந்து 173 மைல் தொலைவில் ஏற்பட்ட குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லையென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

மீளவும் பிரான்ஸ் ஜனாதிபதியாக இமானுவல் மெக்ரன்

கொலைக் குற்றத்திற்காக 29 புலனாய்வு அதிகாரிகளுக்கு மரண தண்டனை

மலேசியா நாடாளுமன்றை கூட்டுமாறு எதிர்க்கட்சி கோரிக்கை