அரசியல்உள்நாடு

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு – அரசாங்கம் விழுந்துவிடும் என்கிறார்கள் – ஜனாதிபதி அநுர

முதலாவது வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பை மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் இன்று (30) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“மிகக் குறுகிய காலமே நாங்கள் ஆட்சியில் இருந்து வருகிறோம் என்பது அவர்களுக்குத் தெரியும். எங்களிடம் சில இடங்களில் மட்டுமே அதிகாரம் உள்ளது.

அரசியல் அதிகாரம் பல நிறுவனங்களின் பலத்தால் தீர்மானிக்கப்படுகிறது. ஜனாதிபதி பதவி என்பது அரசியல் அதிகாரத்தின் வலுவான இடமாகும். அமைச்சரவை ஒரு வலுவான இடம். ஆனால் அமைச்சரவையில் நாங்கள் மூவர்தான் இருக்கிறோம்.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஒரு அமைச்சர். உலக சாதனையில் இடம்பிடிக்கும் அமைச்சரவையாகும். பலமான அமைச்சரவையை அமைக்க விடாமல் இதை எப்படி அசைக்கலாம் என்று பார்க்கிறார்கள். அதனால் தான் மிகவும் பொய்யான செய்திகளை உருவாக்க ஆரம்பித்துள்ளனர்.

மிகவும் பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டதாகவும் பணமும் ஒதுக்கப்பட்டதாகவும், அமைச்சரவையும் ஒப்புதலும் கிடைத்ததாக சொல்கிறார்கள்.

அப்படியெனில் அவர்களுக்கு சம்பளத்தை அதிகரித்து கொடுத்திருக்கலாமே, நீங்கள் ஏற்றுக்கொண்டாலும், ஏற்காவிட்டாலும் ஒன்றுதான். பணம் ஒதுக்கினாலும் சரி, ஒதுக்காவிட்டாலும் சரி.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முதல் வரவு செலவுத் திட்டத்திலேயே அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்கும். இந்த சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். ஜனாதிபதித் தேர்தலில் அரச ஊழியர்களின் ஊடாகவே அதிக சதவீத வாக்குகள் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்திருந்தது.

எனவே, அதை உடைக்கவே இதுபோன்ற பொய்யான உண்மைகள் முன்வைக்கப்படுகின்றன. இன்னும் ஒரு மாதம், இரண்டு அல்லது மூன்று மாதங்களில் அரசாங்கம் விழுந்துவிடும் என்கிறார்கள்.

இந்த நாட்டை கட்டியெழுப்பாதவரை தேசிய மக்கள் சக்தியால் கட்டமைக்கப்பட்ட அரசாங்கத்தை நிறுத்த முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்றார்

Related posts

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழக மாணவர்கள் 6 பேர் விளக்கமறியலில்

சீன பாதுகாப்பு அமைச்சர் – ஜனாதிபதி கோட்டாபய சந்திப்பு

13வது திருத்தம் குறித்து கோட்டாபய தனது மௌனத்தை கலைக்கவேண்டும் என்கிறார் -சன்ன ஜெயசுமன!