அரசியல்உள்நாடு

இலங்கைக்கான சீன தூதுவரை சந்தித்து பிரதமர் ஹரினி கலந்துரையாடல்

இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான சீனக் குடியரசின் தூதுவர் Qi Zhenhong ஆகியோருக்கிடையில் இன்று (30) பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இலங்கையின் வெள்ள நிவாரண முயற்சிகளுக்கு சீன அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்த தூதுவர் Qi Zhenhong, இதனூடாக இரு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால தொடர்புகள் வலுப்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்த தீர்மானம் மிக்க காலப்பகுதியில் சீனக் குடியரசின் தாராள மனப்பான்மை மற்றும் ஒத்துழைப்புக்கு பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்குமிடையிலான முதலீட்டு சந்தர்ப்பங்களை பலப்படுத்துவதற்கு எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் உட்பட இரு நாடுகளினதும் ஒத்துழைப்புகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

Related posts

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலின் பாதிப்பு தொடர்பில் ஆராய நெதர்லாந்திலிருந்து விசேட குழு

IMF ஒப்பந்தம இப்போதைக்கு அவசியம் இல்லை