அரசியல்உள்நாடு

தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிய இருவர் கைது

தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டிகளை ஒட்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர்.

ஹோமாகம பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று இன்று (30) அதிகாலையில் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த போது, ​​ஹோமாகம நகரின் மத்தியில் முச்சக்கரவண்டியில் வந்த இருவர் சுவரொட்டிகளை ஒட்டுவதைக் கண்டு அவர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 1,200 தேர்தல் சுவரொட்டிகள் மற்றும் முச்சக்கரவண்டி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் வத்தளை, மாபொல பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்

அமெரிக்கா ஜனாதிபதியிடம் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை

சரத் பொன்சேகாவின் பதவி இடைநிறுத்ததை தடுக்கும் வகையில் தடை உத்தரவை கோரி ஆட்சேபனைகளை தாக்கல்