உலகம்

ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக நயீம் காசிம்

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவராக அதன் உபதலைவர் நயீம் காசிம் (Naim Qassem) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

புதிய செயலாளர் நாயகத்தை தெரிவு செய்வதற்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகளின் கீழ் நைம்காசிமை சுரா பேரவை புதிய தலைவராக தெரிவு செய்துள்ளது என ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

1991 இல் ஹிஸ்புல்லா அமைப்பின் செயலாளர் நாயகம் அபாஸ் அல் முசாபி  இஸ்ரேலின் ஹெலிக்கொப்டர் தாக்குதலில் கொல்லப்பட்டதை தொடர்ந்து ஹிஸ்புல்லா அமைப்பின் பிரதி தலைவராக நயீம் காசிம் நியமிக்கப்பட்டார்.

இஸ்ரேலினால் கொலை செய்யப்பட்ட ஹிஸ்புல்லா அமைப்பின் ஹசன் நஸ்ரல்லாவின் காலத்திலும் நயீம் காசிம்  தலைமைத்துவ குழுவில் காணப்பட்டார்.

ஹிஸ்புல்லா அமைப்பின் பேச்சாளராக நயீம் காசிம் செயற்பட்டு வந்தார்.

Related posts

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

editor

ரயில் ஒட்டுநர்களுக்கான 30 பணியிடங்களுக்கு 28,000 பெண்கள் விண்ணப்பம்

இந்திய பெருங்கடலில் 4 நிலநடுக்கங்கள்!