அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாக்குறுதி வழங்கியிருந்த போதிலும் எந்தவொரு வகையிலும் அதற்கென நிதி ஒதுக்கப்பட்டிருக்கவில்லையென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் செயற்திறனுடன் கூடிய அரச சேவை உருவாக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் பாதுக்க கலகெதர பகுதியில் மக்கள் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.