முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான வழக்கொன்றின் மேலதிக விசாரணைகள் அடுத்த மாதம் 25ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.
2016ம் ஆண்டு மனித உரிமைகள் ஆணையாளர் நாட்டிற்கு வருகை தந்திருந்த போது கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு முன்பாக வீதியை இடைமறிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரிக்கப்பட்டது. வழக்கில் முதல் பிரதிவாதியான விமல் வீரவன்ச இன்று மன்றில் ஆஜராகவில்லை. அவருக்கு உடல்நிலை சரியில்லையென அவரது சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.
இதற்கமைய வழக்கு அடுத்த மாதம் 25ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.