அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுரவிற்கு செய்ய முடியாது போனாலும் எம்மால் முடியும் என்கிறார் சஜித்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி உறுதியான வெற்றியைப் பெறும். மக்கள் விடுதலை முன்னனணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தான் ஆட்சிக்கு வந்தால் வரிச்சூத்திரத்தை மாற்றுவேன், VAT, வரி, நேரடி மற்றும் மறைமுக வரிகள் குறைப்பேன் என தெரிவித்தார்.

என்றாலும் சர்வதேச நாணய நிதியத்துடன் ஜனாதிபதி இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்திய போதிலும், அந்த வரிகளை குறைப்பதில் உடன்பாடு காணப்படவில்லை என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

தேர்தலின் போது வரியைக் குறைப்பதாகச் சொன்னாலும், ஆட்சிக்கு வந்த பிறகு அதனை உரியவாறு அவரால் செய்ய முடியாதுபோயுள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இன்றும் கூட ஜனாதிபதியால் வரிகளை குறைக்க முடியவில்லை. மக்கள் விடுதலை முன்னணியால் முடியாது போனாலும், ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியாக இருந்தபோது பல சந்தர்ப்பங்களில் IMF பிரதிநிதிகளை சந்தித்து, நாட்டு மக்களின் ஆணை எமக்கு கிடைத்தால் IMF சட்டகத்திற்குள் இருந்தவாறு வரி சூத்திரங்களை மாற்றுவோம் என்ற இணக்கப்பாட்டை அவர்களோடு எட்டியிருந்தோம்.

அப்போது சர்வதேச நாணய நிதியம் அதற்கு இணக்கம் தெரிவித்தது. ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவினால் செய்ய முடியாததை ஐக்கிய மக்கள் சக்தியால் செய்ய முடியும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

2024 பொதுத் தேர்தலை இலக்காக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் ஹோமாகம தேர்தல் தொகுதி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பொன்று ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஐக்கிய மக்கள் கூட்டணியினதும் தலைவரான சஜித் பிரேமதாச தலைமையில் இன்று ஹோமாகம நகரில் இடம்பெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஹோமாகம தேர்தல் தொகுதி அமைப்பாளர் எரந்த வெலியங்க அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சந்திப்பில் கட்சி செயற்பாட்டாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்னும் 4 வருடங்களில் அதாவது 2028 இல் மீண்டும் கடனை செலுத்த வேண்டும். முந்தைய அரசு இவ்வாறு ஒப்பந்தம் செய்து கொண்டது.

2033 ஆம் ஆண்டு கடனை செலுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் கூறினாலும், 2028 ஆம் ஆண்டிலிருந்து கடனை செலுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தானாகவே இணக்கம் தெரிவித்துள்ளது. எனவே, 2028 ஆம் ஆண்டு முதல் கடன் செலுத்தும் நடைமுறையை மேற்கொள்ளக்கூடிய நாடாக நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் இன்னும் வேகமெடுக்கவில்லை.

இன்றும் இந்த தருணத்திலும் நாட்டின் பொருளாதாரத்திற்கு பக்க பலம் தரும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினர் வீழ்ச்சியடைந்து வருகின்றனர். ஐக்கிய மக்கள் சக்தியின் வேண்டுகோளுக்கு இணங்க பராட்டே சட்டம் கூட டிசம்பர் 15 வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு பிரச்சினையால் நமது நாட்டின் சுற்றுலாத்துறை பாதிக்கப்படக்கூடாது.

இதுவரை உருவாக்கப்பட்ட தேசியப் பொருளாதாரப் பிரச்சினைக்கு மத்தியில் சுற்றுலாத் துறைக்கு ஏற்பட்டுள்ள தாக்கமானது கற்பனை செய்து பார்க்க முடியாத விடயமாக அமைந்து காணப்படுகிறது. யார் ஜனாதிபதியாக இருந்தாலும் இந்த நாட்டிற்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்றே நான் பிரார்த்திக்கின்றேன்.

பொறாமைத்தன அரசியலை பின்பற்றாத நபர் என்ற அடிப்படையில் இதய சுத்தியுடன் பிரார்த்தின்றேன். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் காரணமாக கொரானா கோவிட் மற்றும் வங்குரோத்து நிலைக்கு உள்ளான ஒரு நாடு என்ற வகையில், இந்த தேசிய பாதுகாப்பு பிரச்சினை நாட்டை பாதித்தால் நாடு மேலும் வங்குரோத்தடையும் என சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

புதிய இராஜதந்திர உறவுகளை கட்டியெழுப்ப வேண்டும்.

IMF உடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி, 2033 முதல் மீண்டும் கடனை திருப்பிச் செலுத்தும் இணக்கப்பாட்டை எட்ட வேண்டும். IMF ஒப்பந்தம் திருத்தப்பட வேண்டும். என்றாலும் இந்த திசைகாட்டி அரசாங்கத்தாலும் ஜனாதிபதியாலும் அதனைச் செய்ய முடியாது.

வரியைக் குறைக்க முடியாத ஜனாதிபதியால் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை மாற்ற முடியாது. கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தை நீட்டிப்பதும் சாத்தியமற்றது.

இதற்கு வலுவான இராஜதந்திர உறவை முன்னெடுக்க வேண்டும். உலக நாடுகளுடன் நாம் சிறந்த இராஜதந்திர உறவை பேண வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். BRICS சர்வதேச தலைவர்கள் மாநாட்டிற்கு, பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டுக்கு அவர்களை சந்திப்பதற்கு, பங்கேற்பதற்கு தற்போதைய ஜனாதிபதி மறுத்துள்ளார்.

அவர் பிழையான காரியத்தைச் செய்கிறார். இந்த சக்திவாய்ந்த நாடுகளின் தலைவர்களுடன் உறவுகளை பேணி இராஜதந்திர வெற்றிகளை அடைய வேண்டும். இந்த வாய்ப்பை புதிய ஜனாதிபதி தவறவிட்டுள்ளார். எப்படியாவது IMF உடன்படிக்கையை மாற்றியமைக்க வேண்டும். இந்த நாட்டிற்கு விரைவான பொருளாதார வளர்ச்சி அவசியமாக காணப்படுகிறது. விரைவான பொருளாதார வளர்ச்சி காணப்படும் போது தேசிய உற்பத்தி அதிகரிக்கும் என சஜித் பிரேமதாச மேலும் சுட்டிக்காட்டினார்.

முதலீடு, நுகர்வு, சேமிப்பு, உற்பத்தி, மற்றும் ஏற்றுமதி ஆகியவை ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியமான அம்சங்களாக காணப்படுகின்றன. ஒரு நாடு என்ற வகையில் இந்த துறைகளில் ஒரு படி முன்னேறுவதற்கு நாம் தயாராக வேண்டும். இந்த தொலைநோக்கை முன்னெடுக்கக்கூடிய சிறந்த அணியை ஐக்கிய மக்கள் சக்தியே கொண்டுள்ளது.

இந்த அரசால் தேங்காய் வரிசையை கூட நிறுத்த முடியாது.

தேங்காய் வரிசையை நிறுத்த முடியாத மற்றும் பொருட்களின் விலையை குறைக்க முடியாத அரசாங்கத்தால் சர்வதேச நாணய நிதியத்துடன் வெற்றிகரமான ஒப்பந்தத்தில் ஈடுபட முடியாது.

முன்னாள் ஜனாதிபதி கூட 220 இலட்சம் மக்களுக்கு பாரிய எதிர்மறையான அழுத்தங்களை பிரயோகித்தார். இனியும் இதை தொடர முடியாது. ஒரு நாடாக ஒன்றிணைந்து முன்னோக்கி செல்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி வெற்றிபெற வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Related posts

சுற்றுலா ராஜாங்க அமைச்சர் டயானா கமகேவினால் முன்னெடுக்கப்பட்ட திட்டம் தோல்வி

தாதியர் தொடர்பில் வௌியான தீர்ப்பு!

QR குறியீட்டு முறையை நிறுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை