உள்நாடு

மின்சார கட்டண திருத்த முன்மொழிவு கையளிப்பு

இந்த வருடத்தின் மூன்றாம் காலாண்டுக்கான மின்சார கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளது.

டிசம்பர் மாதத்தில் அனைத்துத் துறைகளுக்கும் 6% மிதமான அளவில் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படலாம் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு காலாண்டுக்கும் மின் கட்டணம் திருத்தப்படுகிறது.

அதன்படி, டிசம்பரில் மின் கட்டணத்தை திருத்துவதற்கான முன்மொழிவை மின்சார சபை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளது.

மின்சார கட்டணத்தை 4 முதல் 11 சதவீதம் வரை குறைக்க முன்மொழிந்ததாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது, அனைத்து துறைகளுக்கும் 6 சதவீத மிதமான அளவாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கான முன்மொழிவுகள் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், மேலும் திருத்தங்கள் தேவைப்படுமாயின், எதிர்வரும் திங்கட்கிழமை மின்சார சபைக்கு முன்மொழிவுகள் அனுப்பி வைக்கப்படும் எனவும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

அனைத்து முன்மொழிவுகளும் பொது கலந்தாய்வுக்கு அனுப்பி இறுதி முடிவு எடுக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நிறுவன தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்தார்.

இந்த ஆண்டின் முதல் காலாண்டிற்கான மின் கட்டணங்கள் மார்ச் 4 ஆம் திகதி திருத்தப்பட்டன. அதன்போது, அனைத்து துறைகளுக்கும் 21.9 சதவீதத்தில் மின் கட்டணம் குறைக்கப்பட்டிருந்தது.

இரண்டாவது காலாண்டின் மின் திருத்தம் ஜூலை மாதம் 16 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது. அதன்போது, அனைத்து துறைகளுக்கும் 22.5 சதவீதத்தில் மின் கட்டணம் குறைக்கப்பட்டது.

Related posts

இலங்கையில் 10000 ஐ கடந்த கொரோனா தொற்று

விசேட நிபுணர் உள்ளிட்ட மூவர் MT New Diamond இற்கு

குற்றத் தடுப்பு பிரிவில் முன்னிலையானார் சரத் பொன்சேகா