அரசியல்உள்நாடு

எல்பிட்டிய தேர்தலின் தற்போதைய நிலவரம்

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்கெடுப்பு 48 வாக்களிப்பு நிலையங்களில் இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமான நிலையில், இன்று முற்பகல் 10.00 மணியளவில் 25% வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக காலி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி டபிள்யூ.ஏ. தர்மசிறி தெரிவித்தார்.

வாக்களிப்பு நடவடிக்கைகள் பிற்பகல் 4 மணிக்கு நிறைவடைந்ததன் பின்னர் குறித்த வாக்களிப்பு நிலையங்களில் வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எல்பிட்டிய உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் 55,643 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை கடந்தது

சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு மாத்திரம் ஆட்பதிவு திணைக்களத்தின் முக்கிய சேவை நாளை..!

ஜனவரி முதல் வாகனங்களை இறக்குமதி!