வகைப்படுத்தப்படாத

சாமிமலை ஸ்டொக்ஹம் தோட்ட ஆத்தடிப்பாதை செப்பனிட நடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – அரசாங்கத்தின் கிராமத்துக்கொரு வேலைத்திட்டம் என்ற நிகழ்ச்சி திட்டத்தில் சாமிமலை ஸ்டொக்ஹம் தோட்டத்திலுள்ள ஆத்தடிபாதையைச் செப்பனிடுவதற்கு 5 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பாதையைச் செப்பனிடுவதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வை 22.05.2017 தொழிலாளர் தேசிய சங்கத்தின் சாமிமலை இணைப்பாளரும் அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான சுரேஸ்குமார் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த அடிக்கல் நாட்டு நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் , தமிழ் முற்போக்குக் கூட்டணியின் மத்திய மாகாணசபை உறுப்பினர் மு.ராம், தொழிலாளர் தேசிய சங்கத்தின் சாமிமலை அமைப்பாளர் தெய்வேந்திரன் , மாவட்டத்தலைவர் கருணாகரன் , இளைஞரணி இணைப்பாளர் சோமதேவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

Related posts

හිටපු ආරක්ෂක ලේකම් අත්අඩංගුවට

கிராமப்புற வைத்தியசாலைகளில் டெங்கு சிகிச்சை குழு

Taylor Swift traces her life story with NY gig