உள்நாடு

அறுகம் குடாவிலிருந்து இஸ்ரேலியர்கள் உடனடியாக வெளியேறவேண்டும்

இலங்கையின் அறுகம் குடா உட்பட தெற்கு மேற்கு கடற்கரை பகுதிகளில் இருந்து தனது பிரஜைகள் உடனடியாக வெளியேறவேண்டும் என இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் காணப்படுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் காணப்படும் பகுதிகள் கடற்கரையோரங்களை அடிப்படையாக வைத்து பயங்கரவாத அச்சுறுத்தல் காணப்படுவதாக கிடைத்துள்ள புதிய தகவலை தொடர்ந்தே இந்த வேண்டுகோளை விடுப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

எனினும் எவ்வகையான அச்சுறுத்தல் என்பது குறித்து விசேடமாக எதனையும் குறிப்பிடாத இஸ்ரேலிய அரசாங்கம் இலங்கையின் ஏனைய பகுதிகளில் உள்ள இஸ்ரேலியர்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறும் பொதுஇடங்களில் பலர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளை நடத்தவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

இஸ்ரேலின் பாதுகாப்பு தரப்பினர் இலங்கையின் பாதுகாப்பு தரப்பினருடன் நெருங்கிய தொடர்பில் உள்ளனர் என இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு பேரவை தெரிவித்துள்ளது.

Related posts

ஜனாதிபதி கல்விப் புலமைப் பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிப்பு

தமிழ் வேட்பாளரை இரவு பகலாக தேடி வருகிறோம் – விக்னேஸ்வரன்

ஐ.தே.க தலைமைப் பதவி – மேலும் மூவரின் பெயர்கள் பரிந்துரைப்பு