உள்நாடு

ஸ்ரீலங்கன் எயார்லைன்சினை தனியார் மயப்படுத்தும் திட்டம் கைவிடப்பட்டது

நஷ்டத்தில் சிக்கியுள்ள ஸ்ரீலங்கன் எயர்லைன்சினை தனியார் மயப்படுத்தும் திட்டத்தை ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க கைவிட்டுள்ளார் என தெரிவித்துள்ள ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் புதிய தலைவர் சரத்கனேகொட மிகவும் இலாபகரமானதாக அதனை மறுசீரமைக்கும் திட்டம் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

டிடிஜி ஏசியாவிற்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் என்பது அனைத்து இலங்கையர்களும் பெருமைப்படும் நிறுவனமாக விளங்கவேண்டும் அதன் உரிமையாளர்களாக இலங்கையர்களே விளங்கவேண்டும் என ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.

விமானசேவையே சுற்றுலாத்துறையின் முக்கியமான தூண் என தெரிவித்துள்ள அவர்50 வீதமான சுற்றுலாப்பயணிகள் இதன் மூலமே இலங்கை வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

முச்சக்கர வண்டிகளது சேவைகள் வழமைக்கு

கத்தார் உலக கோப்பை தொடக்க விழாவில் மனங்களைக் கவர்ந்த இளைஞர் யார்?

கோட்டாபய – ரணில் இடையே கலந்துரையாடல்