அரசியல்உள்நாடு

பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய ஐக்கிய மக்கள் சக்தியால் மட்டுமே முடியும் – சஜித்

2033 ஆம் ஆண்டிலிருந்து எமது நாட்டின் கடனை அடைக்குமாறு சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருந்த நிலையில், கடந்த அரசாங்கமும் முன்னைய ஜனாதிபதியும் அதனை நிராகரித்ததோடு 2028 ஆம் ஆண்டிலிருந்து கடனை செலுத்தும் இணக்கப்பாட்டை எட்டியது. எனவே, 2028 முதல் கடனை செலுத்துவதற்குத் போதுமான கையிருப்புக்களை நாடு கொண்டிருக்க வேண்டும்.

கையிருப்பு தானாக சேராது. இதற்கு ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை வலுப்படுத்தி, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நமது நாட்டில் சுருங்கிய பொருளாதாரமே காணப்படுகிறது. இந்த பொருளாதாரம் விரிவடையும் போது நாட்டுக்கு பணமும் அந்நிய செலாவணியும் கிடைக்கும். இது கடனை அடைப்பதற்கான செயல்முறையை தொடக்கி வைக்கும்.

இதனை அடைவதற்கு சரியான தொலைநோக்குப் பார்வையும் சிறந்த குழுவையும் யார் கொண்டிருக்கிறார்கள் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தொழிற்சாலைகளை ஆரம்பித்து அறிவை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தை உருவாக்குவதன் மூலம் கிட்டத்தட்ட 2,60,000 மூடியுள்ள நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினரை யாரால் வலுப்படுத்த முடியும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

ஜனாதிபதி தேர்த்தெடுக்கப்பட்டுள்ளார். பாராளுமன்றத்தில் நாட்டை வழிநடத்தும் பொருளாதார பார்வையைக் கொண்டுள்ள தரப்பு யாருக்கு உள்ளது என்பதை நாம் சிந்திக்க வேண்டும். 2028 கடனைத் திருப்பிச் செலுத்தும் செயல்முறையின் போது கடனைத் திருப்பிச் செலுத்தக்கூடிய, பொருளாதாரத்தை நடைமுறையில் யாரால் உருவாக்க முடியும் என்பதை மக்கள் ஆழமாக சிந்தித்தறிய வேண்டும்.

இந்தப் பொருளாதாரப் பிரச்சினைக்கு ஐக்கிய மக்கள் சக்தியே சிறந்த தீர்வு. இதற்குத் தேவையான திறமையான அணி தன்னிடம் இருப்பதாக என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கம்பஹா, கிரிதிவெல பிரதேசத்தில் அமைந்துள்ள ஹர்ஷன ராஜகருணாவின் இல்லத்தில் நேற்று (13) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

2028 ஆம் ஆண்டிலிருந்து கடனை அடைத்து வங்குரோத்து நிலையிலிருந்து விடுபடக்கூடிய நாட்டை பிரயோக ரீதியாக ஐக்கிய மக்கள் சக்தியாலும் ஐக்கிய மக்கள் கூட்டணியாலுமே உருவாக்க முடியும். நாட்டு மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

வறுமை, வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் காண வேண்டும். நாடு குறித்து சிந்தித்து நாட்டிற்கு முன்னுரிமை கொடுத்து செயற்பட வேண்டும் என்று சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இன்று காணப்படும் நிலையில் இருந்து நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் தற்போதைய ஜனாதிபதியுடன் தொடர வேண்டும். அற்ப வாதங்களை, அரசியல் கருத்துக்களையும் விட்டுவிட்டு நாட்டுக்கும் மக்களுக்கும் பக்க பலத்தை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்திற்கு செல்ல வேண்டும். இதற்கான முயற்சியை ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்க தயாராக இருப்பதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

வருமான மூலங்களை வலுப்படுத்தி, புதிய தொழில்களை ஆரம்பிக்கத் தேவையான கொள்கையை உருவாக்கி அதற்கான சூழலை ஐக்கிய மக்கள் சக்தியாலயே உருவாக்க முடியும் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Related posts

சட்டக்கல்லூரி நுழைவு பரீட்சையில் முஸ்லிம் மாணவிகளுக்கு அநீதி: களமிறங்கிய முஸ்லிம் சட்டத்தரணிகள்

பெரிய வெள்ளியை வீடுகளில் இருந்தே நினைவு கூறுமாறு கோரிக்கை

கொரோனா அச்சுறுத்தல்; பரீட்சைகள் அனைத்து ஒத்திவைப்பு [VIDEO]