அரசியல்உள்நாடு

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை – சரத் பொன்சேகா

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடுவதில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தேர்தலில் திசைகாட்டி மற்றும் எரிவாயு சிலிண்டர் சின்னங்களில் போட்டியிடுவது தொடர்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததன் காரணமாக மேற்படி தீர்மானத்திற்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரை அவருக்கு உரிய இடத்தில் மக்கள் வைத்துள்ளார்கள் என்று நான் நம்புகிறேன்.

அதை எண்ணி நான் மகிழ்ச்சியடைகிறேன். பொதுத் தேர்தல் தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் சுமார் 10 நிமிடங்கள் மிகக் குறுகிய கலந்துரையாடலை மேற்கொண்டேன்.

ஆனால் ஜனாதிபதி தேர்தலின் போது அவருடன் இல்லாதவர்களுக்கு, வேட்புமனு வழங்குவதற்கு அவருக்கு உடன்பாடில்லை என்று தெரிவித்தார். அடுத்ததாக முன்னாள் பிரதமருடன் கலந்துரையாடினேன். முன்னாள் அமைச்சர்களுடனும் கலந்துரையாடினேன்.

சிலிண்டர் சின்னத்தில் உள்ளவர்களுடனும் கலந்துரையாடலை மேற்கொண்டேன். எனினும் உடன்பாடு எட்டப்படவில்லை. அதற்கமைய, இந்த தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளேன்” என்றார்.

Related posts

அனைத்து பௌத்த அறநெறிப் பாடசாலைகளுக்கும் விடுமுறை

சீரற்ற வானிலை – மேலும் சில பாடசாலைகளை மூட தீர்மானம்

editor

ரணிலின் ரூட் க்ளியர் என்று சொல்கிறார் கம்மன்பில