அரசியல்உள்நாடு

நுவரெலியாவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேட்புமனு தாக்கல்

நடைபெறவுள்ள 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக அதன் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் தவிசாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் உள்ளிட்ட குழுவினர் இன்று (11) காலை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணியின் கீழ் யானை சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

இதன் நுவரெலியா மாவட்ட தலைமை வேட்பாளாரான ஜீவன் தொண்டமான் மற்றும் வேட்பாளர்கள் உள்ளிட்ட பலர் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

Related posts

ஐ.ம.ச. வுடன் கூட்டணியாக கலந்துரையாடத் தயார் – மனோ கணேசன்

editor

கொழும்பில் நீர் விநியோகம் தடை

பாடசாலை மாணவர்களுக்கு பருவச் சீட்டுகள் இரத்து!