அரசியல்உள்நாடு

அதாஉல்லா, முஷாரப், ஜெமீல் ஆகியோர் சிலிண்டர் சின்னத்தில் போட்டி

திகாமடுல்ல மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் சிலிண்டர் சின்னத்தில் 6 முஸ்லிம்களும், 3 சிங்களவர்களும், ஒரு தமிழரும் போட்டியிடுகின்றனர்.

முன்னாள் அமைச்சரான தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ்வும் இந்த வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

அத்துடன், முன்னாள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவரான கலாநிதி ஏ.எம். ஜெமீல் ஆகியோரும் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

இவர்களுடன் ஐக்கிய தேசிய கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளர் லொயிட்ஸ் ஆதம் பெலப்பை, கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் சப்ராஸ் மன்சூர் மற்றும் நுஸ்கி அஹமட் ஆகியோரும், ஒரேயொரு தமிழ் வேட்டாளராக வி.ஜெயச்சந்திரன் என்பவரும் போட்டியிடுகின்றனர்.

அத்துடன், பெரும்பான்மை சமூகத்தில் இருந்து முன்னாள் அமைச்சர் தயா கமகே, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயானி விஜேவிக்ரம மற்றும் பிரான்ஸிஸ் டயஸ் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

-அஸ்லம் எஸ்.மெளலானா

Related posts

விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்

“தாக்குதலை இஸ்லாமிய தீவிரவாதிகளே முன்னெடுத்தனர்” கார்டினலுக்கு விஷேட அறிக்கை வழங்கிய கோட்டபாய

நாடு திறக்கப்படுமா? நாளை தீர்மானம்