உள்நாடு

50 பயணிகளுடன் பயணித்த பஸ் – திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம்

கொழும்பில் இருந்து எம்பிலிப்பிட்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று மாதம்பே-கவுடுவாவ பிரதேசத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

இன்று (10) காலை கொழும்பில் இருந்து புறப்பட்ட பஸ்ஸில் சம்பவம் இடம்பெற்ற போது சுமார் 50 பயணிகள் அமர்ந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

பிரதேசவாசிகளின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும் பஸ் முற்றாக தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இறக்குவானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

எமது மக்கள் சலுகைகளுக்கு விலை போகின்றனவர்கள் அல்லர் – வேலுகுமார்

editor

சங்கு சின்னத்தில் களமிறங்க தீர்மானம் – சுரேஸ் பிரேமச்சந்திரன்

editor

டிரானின் கருத்துக்கு எதிர்ப்பு – மேல் நீதிமன்ற சட்டத்தரணிகள் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்