அரசியல்உள்நாடு

பாராளுமன்ற தேர்தல் – உதய கம்மன்பில வேட்புமனுவில் கையொப்பமிட்டார்

பிவித்துரு ஹெல உறுமய (PHU) தலைவர் உதய கம்மன்பில, சர்வசன அதிகாரம் கூட்டணியின் கீழ் பாராளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் இன்று (09) கையொப்பமிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியை உருவாக்கி அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் நம்பிக்கையுடன் தேர்தலில் போட்டியிட உள்ளதாக கம்மன்பில தெரிவித்தார்.

இதேவேளை, சர்வசன அதிகாரம் கூட்டணியின் கீழ் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களில் கையொப்பமிட்டவர்களில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தும் அடங்குவார்.

எவ்வாறாயினும், இந்தக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவும் இதனைப் பின்பற்றுவாரா என்பது தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.

Related posts

வெளிவிவகார அமைச்சகத்தின் அறிவிப்பு

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில்லை – 30க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் தீர்மானம்

editor

CEYPETCO எரிபொருள் விலைகளும் அதிகரிக்கிறது