உள்நாடு

புலமைப்பரிசில் பரீட்சை கேள்விகளை கசியவிட்ட இருவரும் விளக்கமறியலில்

இவ்வருடம் இடம்பெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் சில கேள்விகளை கசியவிட்டதாக கூறப்படும் மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் மற்றும் பாடசாலை ஆசிரியரும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அவர்கள் நேற்று (07) கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சையின் சில கேள்விகளை வெளியாட்களுக்கு வழங்கியதாக சந்தேகநபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Related posts

மின்சாரம் தாக்கி மாணவன் பலி!

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான சிறந்த சூழல் இல்லை

எமது கொள்கைளை ஏற்றால் ஐ.தே.க.வுடன் இணைந்து பணியாற்ற தயார்